இரணியல்: வாக்குச்சாவடி சிறப்பு முகாம்.. கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 01.01.2025 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் 31-12-2006 அன்று அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் மேற்கொள்ளவும் ஏதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025 கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த 29ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது இந்த முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (17-ம் தேதி) இரணியல் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் பெயர் சேர்க்கை, திருத்தம் செய்ய அளித்த விண்ணப்பங்களை பார்வையிட்டார். பதிவேடுகளையும் சரிபார்த்தார். நிகழ்ச்சியில் கல்குளம் தாசில்தார் சஜித், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.