குமரி: தேசிய நெடுஞ்சாலைக்கு 14 கோடி டென்டர் ; எம்பி தகவல்

79பார்த்தது
குமரி மாவட்டம் பள்ளிவிளை பகுதியில் காமராஜர் படிப்பகத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்  சொந்த செலவில் 12 லட்சம் ரூபாய்  கொடுத்து காமராஜர் வெங்கல சிலை அமைக்கப்பட்டது, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் கலந்து கொண்டு, செய்தியாளர்களிடம் கூறும் போது, -   
  குமரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது இந்த சாலையை சீரமைக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை சந்தித்து  வலியுறுத்தி ரூபாய் 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்க நிலையில் உள்ளது கூடிய விரைவில் இந்த சாலைகள் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார் மேலும் குமரி மாவட்டத்தில் பாஜக வளர காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றம் சொல்லத்தான் சொல்வார்கள் எனவும்  ஆனால் அதற்கு இடம். கொடுக்காதவாறு எங்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என கூறினார்.  
    இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி