தேனி அல்லிநகரம் பகுதியில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என கூறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்