கோட்டூரில் சர்க்கரை துகிலி கோட்ட அலுவலகம் திறப்பு விழா
கோட்டூரில் இயங்கி வந்த ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை பல்வேறு நிர்வாக சிக்கலால் ஏழு ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் படி இந்த ஆலையை பிரபல எஸ். என். ஜே குழுமம் வாங்கியது. இந்த ஆலையை வருகிற டிசம்பர் மாதம் முதல் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. கோட்டூர் எஸ். என். ஜே குழுமத்தின் ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலையின் திருவிடைமருதூர் கரும்பு மண்டல அலுவலகம் மற்றும் துகிலி கோட்ட அலுவலகம் கோட்டூரில் திறக்கப்பட்டது. இந்த விழாவில் கஞ்சனூர், கோட்டூர், திருக்கோடிக்காவல் , நரசிங்கன்பேட்டை. கிராமங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கரும்பு பயிரிட தங்கள் ஆர்வத்தினையும், கோரிக்கைகளையும் தெரிவித்தனர். சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் தரப்பில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தற்சமயம் நடவுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள தேவையான அலுவலர்களை நியமனம் செய்துள்ளதாகவும் விரைவில் கோட்டூர் ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை இயக்கப்படும் என்றும் உறுதிமொழி வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் புண்ணியமூர்த்தி கோட்டூர் சர்க்கரை ஆலை பொது மேலாளர் கரும்பு வரவேற்புரையாற்றினார், திருஞானம் பொது மேலாளர் கரும்பு பெண்ணாடம் சர்க்கரை ஆலை நவீன காலத்திற்கு ஏற்றார் போல் கரும்பு நடவினையும், கரும்பு அறுவடையையும் எந்திரங்கள் மூலமாக எளிமையாக எப்படி மேற்கொள்வது செலவினங்களை கட்டுப்படுத்துவது எப்படி என்றும் ஆலோசனை வழங்கினார்கள்.