GT அணிக்கு 153 ரன்களை SRH அணி இலக்காக நிர்ணயித்தது. ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற GT அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் SRH சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. இறுதியில், 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதீஷ் 31, க்ளாஸன் 27 மற்றும் கம்மின்ஸ் 22* ரன்கள் எடுத்தனர். GT அணி தரப்பில் சிராஜ் 4, பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.