மதுரையில் (இன்று) முதல் வருகிற 6-ந் தேதி வரை அகில இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் (சி.பி.எம்.) மாநாடு நடைபெறுள்ளது. இதில் பங்கேற்க நாகை மாவட்டம், கீழ்வேண்மணி தியாகிகள் நினைவிடத்தில் இருந்து கொடி ஊர்வலப் பயணக்குழுவினர் புறப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கொடி பயணக்குழுவினர் மேளதாளம், வாணவேடிக்கை முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சாமி நடராஜன், ஜெயசீலன், மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாதர்சங்க மாநில செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஜெயபால் மற்றும் மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.