திருக்கானூர் கரும்பேஸ்வரர் கோயிலில் சூரிய பூஜை

84பார்த்தது
திருக்கானூர் கரும்பேஸ்வரர் கோயிலில் சூரிய பூஜை
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருக்கானூர் கரும்பேசுவரர் கோயிலில் சூரியதேவன் இறைவனைப் பூஜிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் சூரியதேவனின் கிரணங்கள் (ஒளி) காலை 6 மணிமுதல் 6.30 வரை சிவபெருமான் மீது விழும். இதனைச் சூரிய பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை அதிகாலை சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. காலை 6.15 மணிக்கு சுவாமி மீது சூரிய ஒளி பரவியபோது பக்தர்கள் வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி