
திருக்காட்டுப்பள்ளி: தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு
திருக்காட்டுப்பள்ளியில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப முகமையின் கீழ் தெருக்கூத்து மூலம் வேளாண் தொழில்நுட்பங்கள் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பூதலூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் மு. ராதா கலந்துகொண்டார். விவசாயிகளுக்கு விவசாய பதிவுகளை சரிபார்த்தல் முகாமின் முக்கியத்துவம் குறித்தும், கோடை உழவின் நன்மைகள் குறித்தும், சன்ன ரக நெல் சாகுபடி தொழில்நுட்பங்களும், நாட்டு நடவு முறையில் துவரை சாகுபடி செய்வது குறித்தும், மக்காச்சோள சாகுபடியின் நன்மைகள் குறித்தும், வயலில் பசுந்தாள் உரங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், சிறுதானிய சாகுபடி குறித்தும், நிலக்கடலையின் ரகங்கள் அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்தும் தெருக்கூத்தின் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. பூதலூர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் அனைவரும் இதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். முடிவில் பூதலூர் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.