பாபநாசம் - Papanasam

தஞ்சை: சுவாமிமலையில் சூரசம்ஹாரம்

அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆறாம் நாள் விழாவாக சூரசம்ஹாரம் நடைபெற்றது. படிச்சட்டத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீ சண்முகர் சுவாமி படிச்சட்டத்தில் எழுந்தருளி, ஸ்ரீ சந்திரசேகர் ஸ்ரீ வீரபாகு ஸ்ரீ வீரகேசரி ஆகியோருடன் வீதியுலா வந்தார். பின்னர் 108 சங்காபிஷேகத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  மாலையில் தங்கமயில் வாகனத்தில் ஏறி ஸ்ரீ சண்முகர் சுவாமி மீனாட்சி சொக்கநாதர் அம்பாளிடம் வேல்வாங்கினார், பின்னர் சூரசம்ஹாரம் செய்ய வாகனத்தில் வீதியுலா சென்று, ஸ்ரீ வீரபாகு, ஸ்ரீ வீரகேசரி பரிவாரங்களுடன் தேரடி வீதியில் பத்மாசுரனின் முதல் தலையையும், கீழவீதியில் இரண்டாவது தலையையும், சன்னதி தெருவில் மூன்றாவது தலையையும் வதம் செய்தார்.  அப்போது ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர். சூரனை வதம் செய்த பின் தங்கமயில் வாகனத்தில் வீதியுலா வந்த ஸ்ரீ சண்முகர் மீண்டும் படிச்சட்டத்தில் எழுந்தருளினார். பூஜைகள் நடைபெற்றது.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా