அய்யம்பேட்டை அருகே நெடார்சத்திரம் மெயின்ரோட்டில் வசிக்கும் முகமதுஅலி. இவருடைய மகள் சஹானா ஆயிஷா (வயது 32) சம்பவத்தன்று சஹானா ஆயிஷா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் பீரோவில் பதுங்கியிருந்த பாம்பு சிறுமியை கடித்தது. இதை அறியாத சிறுமி தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென சிறுமி வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்து விழுந்தாள்.
அப்போது வீட்டில் பீரோவின் அடியில் பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை குடும்பத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுமியை மீட்டு தஞ்சாவூர் ராசாமிர்தா சசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சஹானா ஆயிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.