பாபநாசம் பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு
மழை பெய்து வருகிறது. நேற்று காலை வெயில் அடித்தது.
பின்னர் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இந்த மழை 1/2 மணிநேரம் நீடித்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.
இந்த மழை இளம் பயிர்களுக்கு பயனளிக்கும் என்பதால் பு
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.