
செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் சுவாமிமலையில் நின்றுசெல்லும்!
செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் சுவாமிமலையில் நின்றுசெல்லும்! தைப்பூசத்தையொட்டி சுவாமிமலையில் ரயில் நின்றுசெல்லும் என அறிவிப்பு. செங்கோட்டை - மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இரண்டு நாள்களுக்கு சுவாமிமலை ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.