போலீஸ் ஸ்டேஷனின் சுருண்டு விழுந்த கொலையாளி

80பார்த்தது
போலீஸ் ஸ்டேஷனின் சுருண்டு விழுந்த கொலையாளி
கேரளாவின் திருவனந்தபுரத்தில் காதலி, தம்பி உள்பட 5 பேரை கொலை செய்த குற்றவாளி காவல் நிலையத்தில் திடீரென சுருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அஃபான் (23) என்பவர்
போலீஸ் காவலில் இருந்தபோது மயங்கி விழுந்தார். அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். கடன் தொல்லையால் 5 பேரை கொன்ற அஃபான், எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றார். அண்மையில் சிகிச்சை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தடயவியல் பரிசோதனைக்காக காவல் நிலையம் அழைத்து வந்த போது மயங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி