தென்காசி: ஆலங்குளம் அருகே 15 திருநங்கைகள் ஒரே வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். நேற்று அந்த வீட்டில் ரத்தவெள்ளத்தில் திருநங்கை ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அங்கு விரைந்த கடையம் போலீசார் நடத்திய விசாரணையில், அரசர்குளத்தைச் சேர்ந்த திருநங்கை சைலஜா (34) என்பவர் குடியிருந்து வந்துள்ளார். அதே வீட்டில் வசிக்கும் மகாலட்சுமி (34), மதுமிதா (27) ஆகிய 2 திருநங்கைகளும் சேர்ந்து சைலஜாவின் மர்ம உறுப்பை கத்தியால் அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.