கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கோயில் திருவிழாவிற்காக அழைத்து வரப்பட்ட ஊட்டோளி மகாதேவன் என்ற யானை மதம் பிடித்து ஓடியது. இதை பார்த்து பயந்த பக்தர்கள் தலைத்தெறிக்க ஓடினர். மேலும், அருகில் இருந்த கார், பைக் போன்ற போன்ற வாகனங்களை சேதப்படுத்தி துவம்சம் செய்தது. பின்னர், பாகன் உள்ளிட்டோர் யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.