நீலகிரி: உதகை அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பேருந்தை சாமர்த்தியமாக வனப் பகுதிக்குள் விட்டு 60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
பேருந்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், ஓட்டுநர் உள்பட 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்தில் இருந்து பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.