பட்டீஸ்வரத்தில் தமிழறிஞர்கள் திருக்கோயில் திறப்பு விழா

68பார்த்தது
பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழ் அறிஞர்கள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக பள்ளி வளாகத்தில் தமிழறிஞர்களின் திருக் கோயில் அமைக்கப்பட்டது. இந்த கோயில் திறப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்யாணசுந்தரம் எம். பி. ஆகியோர் கலந்துகொண்டு கோயிலை திறந்து வைத்தனர்.

இந்த கோயிலில் திருவள்ளுவர், பாரதிதாசன், பாரதியார், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் உள்பட 36 தமிழறிஞர்களின் உருவச் சிலைகள் அவர்களது பெயருடன் வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது, ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் குடும்பங்கள் உண்டு. இருந்தாலும், தன்னிடம் படிக்கும் மாணவ, மாணவிகளை பிள்ளைகளாக நினைத்து உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும், அர்பணிப்பு எண்ணத்தோடும் பணியாற்றி வருகிறார்கள். ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு, மாணவ, மாணவிகள் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தன்று மாணவிகள் இன்பம் பொங்கும் தமிழ்நாடு என்பதை எழுதி நமது உணர்வுகளுக்கு இடமளிக்கும் வகையில் தங்கள் வீடுகளில் கோலமிட வேண்டும் என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்உட்பட பலர் கலந்து உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி