சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் சோதனை நடந்த நிலையில், இன்றும் சோதனை தொடர்கிறது. அதே போல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான தயாரிப்பு நிறுவனங்களான அக்கார்டு, எஸ்என்ஜே நிறுவனங்களிலும் சோதனை நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் கொள்முதல், விற்பனை குறித்த ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.