அமெரிக்காவில் H1B விசாவில் வேலைக்கு செல்பவர்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லலாம். அந்த குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பியவுடன், வேலை தேட 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு வேறு விசா வழங்கப்படும். ஆனால், அந்த நடைமுறைக்கு தற்போது டெக்ஸாஸ் கோர்ட் தடைவிதித்துள்ளது. இதனால், அங்கு இருக்கும் 1.34 லட்சம் பேருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அந்நாட்டில் இருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலையில் உள்ளனர்.