ஒரத்தநாடு - Orathanadu

தஞ்சையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நிகழ்ச்சி

தஞ்சையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நிகழ்ச்சி

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகுகள் சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி, மருதுபாண்டியர் நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர்  கொ. மருதுபாண்டியன்  வழிகாட்டுதல்படியும், கல்லூரி முதல்வர்  மா. விஜயா  அறிவுறுத்தலின்படி, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்வில், கல்லூரி துணை முதல்வர் இரா. தங்கராஜ் வாழ்த்திப் பேசினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.  அதன் பின்பு, தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக நடத்தப்பட்ட ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  இந்தப் பேரணியானது தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி காவேரி நகரில் நிறைவடைந்தது. இதில் என் நோக்கம் ஊழலற்ற இந்தியா, ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவோம், கையூட்டு வரும் முன்னே, கைவிலங்கு வரும் பின்னே, நேர்மையே நமது வாழ்வின் வழிமுறை என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவ- மாணவிகள் பேரணியாக சென்றனர்.   ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா. கண்ணன் செய்திருந்தார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా