கும்பகோணத்தில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகத்துக்கு முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குடந்தை வக்கீல் சங்கத்தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். செயலர் செந்தில்ராஜன், பொருளாளர் ராஜாசீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூரில் வக்கீல் கண்ணன் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், வக்கீல்களுக்கு பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.