தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றி: ரஜினிகாந்த் பேட்டி
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த அக். 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜயின் பேச்சு அதிர்வலையை கிளப்பியது. விஜயின் பேச்சு குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் இன்று (அக். 31) கேட்ட போது, “தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது, விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார். விஜயின் பேச்சு குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. நன்றி: நியூஸ்18தமிழ்நாடு