கர்நாடகா: ஹாசன்நகரில் உள்ள ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. தீபாவளி சமயம் 10 நாட்கள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டின் மற்ற தினங்களில் கோயில் மூடப்பட்டு இருக்கும். தீபாவளி முடிந்து கோயில் மூடப்படும் பொழுது ஏற்றப்படும் தீபம், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு கோயில் திறக்கும் வரை அணையாமல் எரிந்து கொண்டிருப்பதும், அம்மனுக்கு அணிவிக்கும் மாலை வாடாமல் இருப்பதும் இந்த கோயிலின் அதிசயமாக பார்க்கப்படுகிறது.