ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர். வெலன்சியா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அதேவேளை, கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.