நம் நாட்டில் வாழ்ந்த ஆதிகுடிகள், உயரமான இடங்களில் நின்று எரியூட்டப்பட்ட குச்சிகளை சுழற்றினர். அமாவாசை காலத்தில் பூமிக்கு வரும் பித்ருக்கள் நமது பூசைகளை ஏற்றுக் கொண்டு மீண்டும் சொர்கம் நோக்கிச் செல்வர். அப்போது அவர்களுக்கு வழிகாட்ட இந்த வெளிச்சம் உண்டாக்கி தருவதாக கூறப்பட்டது. இந்த பழக்கத்தின் நீட்சியே இன்று மத்தாப்பு சுழற்றும் பழக்கமாக மாறியுள்ளது. பட்டாசு வெடிக்க சாஸ்திரத்தில் கூறப்படவில்லை, ஆனால் மத்தாப்பு சுழற்ற அறிவுறுத்துகிறது.