மதுரை ரயில் நிலையத்தில் சென்னை - போடிநாயக்கனூர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மதுரை ரயில் நிலையம் அருகே சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் ரயில் தடம் புரண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் திடீரென கழன்றதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.