கொல்கத்தாவை சேர்ந்த 20 வயதான இளம்பெண் நேற்று முன் தினம் (அக். 29) தனது ஆண் நண்பருடன் கட்டுமான பணியில் இருந்த வீடு ஒன்றில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஐவர் கும்பல் அந்த இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதில் இரண்டு பேர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நன்கு அறிமுகமானவர்கள் ஆவர். இது குறித்த புகாரின் பேரில் ஐந்து பேரை போலீசார் நேற்று (அக். 30) கைது செய்தனர்.