சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று (அக். 30) திடீரென இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. அண்ணாநகர், கோடம்பாக்கம், வில்லிவாக்கம், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. சிறிது நேரம் பெய்த மழையிலேயே பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அந்த வகையில், வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல தேங்கியதால் மினி பேருந்து நீரில் சிக்கிக் கொண்டது.