

எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,17,158 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இந்நிலையில், இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக சந்திரகுமார் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு