அதிமுக தலைமை அலுவலகத்தில், முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் திடீர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இபிஎஸ் விழாவை செங்கோட்டையன் புறக்கணித்த நிலையில் இந்த அவசர ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஷ்வநாதன், ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற உள்ளனர். இபிஎஸ் நிகழ்ச்சியில், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேறவில்லை என செங்கோட்டையன் கூறியது குறிப்பிடத்தக்கது.