திண்டுக்கல்: தைப்பூசத்தை ஒட்டி பழநி முருகன் கோயில் இன்று (பிப்.,10) முதல் 3 நாட்களுக்கு சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைவருக்கும் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பழனி கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.