ஈரோடு மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இபிஎஸ் நிகழ்ச்சி புறக்கணிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இபிஎஸ் பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை புறக்கணித்ததால் விழாவில் பங்கேற்கவில்லை. நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் அடையாளம் காணப்பட்டவர்கள். அழைப்பிதழ், பேனர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் விழா புறக்கணித்தேன்” என விளக்கம் அளித்துள்ளார்.