கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், அரசியல் பிரமுகரின் மகன் உயிரிழந்தார். சிபிஎம் மாநில குழு உறுப்பினரின் மகனான ஆதர்ஷ், திருவனந்தபுரத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆதர்ஷின் கார் எதிரே வந்த லாரியின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.