குஜராத்: பனஸ்கந்தா மாவட்டத்திற்கு மணல் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி குறுகிய பாதை வழியாகச் செல்ல முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் சாலை அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழந்தை உள்பட 3 பெண்கள் மீது மணல் லாரி சரிந்து விழுந்தது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கிரேன் உதவியுடன் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் 4 பேரின் நசுங்கிய உடலை மீட்டனர்.