சிவகங்கை: நூல்கள் பயன்பாடு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி

76பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள உலகம் சுற்றிய தமிழர் சோமலெ நினைவு அரசு கிளை நூலகத்தில் நூல்கள் பயன்பாடு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இவ்விழாவில் தமிழ் ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள் பங்கேற்று 1881ம் ஆண்டு பிறந்து பல்வேறு வடமொழி இலக்கிய புலவர்கள் இயற்றிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவரும், தமிழில் பல நூல்களை இயற்றி தமிழக அரசால் "மகா மகோபாத்தியாயர்" என்ற பட்டம் வழங்கி புகழப்பட்ட தமிழ் ஆர்வலர் பெரும் புலவர் "பண்டிதமணி"யின் வாழ்க்கை குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினர். தொடர்ந்து நூல்களை பயன்படுத்துவதால் உண்டாகும் சிறப்புகளை குறித்து பேசியதோடு, உலகளாவிய அளவில் வேறு எங்குமே இல்லாத அளவிற்கு குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே 4665 நூலகங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

எனவே நாம் அன்றாட வாழ்வில் வாழ்க்கைக்கு பயனுள்ள நூல்களை அதிக அளவில் பயன்படுத்துவர்களாக நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பாக பேசிய நூலக வாசகர்களுக்கு நூலகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது

தொடர்புடைய செய்தி