நாளை 11ம் தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமாக கொண்டாடுகின்றனர். குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் பாதயாத்திரை செന்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தேவகோட்டையில் இருந்து இன்று 10ம் தேதி அதிகாலையில் சிலம்பனி ஸ்ரீ சிதம்பரவிநாயகர் கோவிலில் இருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் என்ற செட்டியார்களின் 108 காவடிகளுடன் ஆண் பெண் பக்தர்கள் ஏராளமானோர் குன்றக்குடிக்கு நடைபயணம் மேற்கொண்டனர். வழி நெடுகிலும் அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் உற்சாகத்துடன் செல்கின்றனர்.