சிவகங்கை: அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா

81பார்த்தது
சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீ வால குருநாதன் சுவாமி திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

இக்கோவிலில் பிரதான சன்னதியில் சுவாமி அம்பாள் மற்றும் கோவில் உள்வலாகத்தில் ஸ்ரீ பேச்சியம்மன் 21 பந்தியில் ஸ்ரீ ராக்காயி சோனைசாமி சப்த கன்னிமாரியம்மன் காளியம்மன் அக்னி வீரபத்திரர் நவகிரகங்கள் துர்க்கை அம்மன் தட்சிணாமூர்த்தி ஆஞ்சநேயர் லிங்கோத்பவர் உள்ளிட்ட 31 தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர். முதலாம் ஆண்டு வருஷாபிஷேக தினத்தில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக கோவில் முன்பு புனித நீரால் நிரப்பப்பட்ட 31 கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கின.

தொடர்ந்து கோ பூஜை நவகிரக ஹோமம் நடைபெற்று யாக குண்டத்தில் 108 மூலிகைப் பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து பூர்ணாகுதி அளிக்கப்பட்டன. தொடர்ந்து கலசங்களுக்கு உதிரிப் புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மங்கல வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மூலவர் சுவாமி அம்பாளுக்கும் மற்றும் 31 தெய்வங்களுக்கும் கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் சிறப்பு பூ

தொடர்புடைய செய்தி