சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு மாடல் பள்ளியில் 74வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக அடிகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ரவி கலந்து கொண்டு கல்வி, விளையாட்டு, ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். கலை நிகழ்ச்சியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு உற்சாகமாக நடனம் ஆடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியினை பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு கைதட்டி ஆரவாரம் செய்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராஜபாண்டி, பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.