வேலூர் மாவட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் ஐ.சி.யூ.வில் உள்ளார். வயிற்றில் உயிரிழந்த 4 மாத சிசுவை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பெண்ணின் வலது கால் முட்டி, முதுகு தண்டுவடத்தில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.