மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் மை பாரத் – நேரு யுவ கேந்திரா தமிழ்நாடு & புதுச்சேரி மாநில இயக்குநர் செந்தில்குமார் பேசுகையில்:
மத்திய அரசு தேசிய இளையோர் பாராளுமன்ற திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, 2047-ஆம் ஆண்டுக்குள் "வளர்ச்சியடைந்த பாரதம்" என்ற இலக்கை முன்னிலைப்படுத்தி, "வளர்ச்சியடைந்த பாரத இளையோர் பாராளுமன்றம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் மாநில அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கே தேசிய பாராளுமன்றத்தில் உரையாற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இம்முறை முதல் மூன்று இடங்களிலும் தேர்வாகும் இளைஞர்களுக்கு விவாதங்களில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளையோர் தங்கள் வேறுபட்ட கருத்துகளையும், ஆக்கபூர்வமான அறிவாற்றலையும் வெளிப்படுத்த இப்போட்டி சிறந்த வாய்ப்பாக அமையும் என அவர் கூறினார்.