தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.,24) காலை 10 மணிக்கு திறந்து வைத்து, மருந்து விற்பனையை தொடங்கி வைக்கிறார். இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் மருந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 33 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.