தமிழ்நாட்டில் கஞ்சா செடி வளர்த்த மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள அறையில் ஐந்து கல்லூரி மாணவர்கள் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் இருந்து 24 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.