

ஈரோடு: ரவுடி வெட்டிக்கொலை.. வெளியான பதைபதைக்கும் வீடியோ
ஈரோடு அருகே ஜான் என்கிற ரவுடி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. சித்தோடு அருகே சேலத்தை சேர்ந்த ஜான் தனது மனைவியுடன் காரில் சென்றபோது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 8 பேர் கொண்ட கும்பம் ரவுடி ஜானின் காரை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. ஜான் கொலை தொடர்புடைய 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். தப்பிடியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஜானை மர்ம கும்பல் வெட்டி சாய்கும் காட்சியை அவ்வழியாக காரில் சென்ற ஒருவர் தனது மொபைலில் வீடியோவாக பதிவாக்கியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.