சிவகங்கை - Sivaganga

வீரப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் மாயம் போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள வீரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் வயது (23). இவர் வீட்டில் இருந்தவர் திடீரென மாயமாகியுள்ளார். அவரது பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் சரவணனின் தாயார் மதகுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் அடிப்படையில் மதகுபட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சரவணன் குறித்து இன்று (செப்.,21) இரவு சுமார் எட்டு மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

வீடியோஸ்


சிவகங்கை
Sep 21, 2024, 17:09 IST/திருப்பத்தூர்
திருப்பத்தூர்

புதிய பேருந்தை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த அமைச்சர்

Sep 21, 2024, 17:09 IST
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், காரைக்குடி மண்டலம் சார்பில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் 01 புதிய பேருந்தினை இன்று(செப்.,21) பொதுமக்களின் பயன்பாட்டிற்கென துவக்கி வைத்து தெரிவிக்கையில்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான திட்டங்களை தொலைநோக்கு சிந்தனையுடன் சிந்தித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அரசின் நிதிநிலை நெருக்கடியினை சீர் செய்து, கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை பொதுமக்களின் தேவைகள் அறிந்து செயல்படுத்துவது, அரசின் முக்கிய கடமையாகும். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் துரிதமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் சாலை வசதி இணைப்பு இல்லாத கிராமங்கள் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில், நகரங்களுக்கு இணையாக அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.