சிவகங்கை சிவன் கோயில்அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்கலந்து கொண்டு பேசும் போது, சுதந்திரத்திற்காக போராடிய வீரமங்கை வேலு நாச்சியாருக்குசிவகங்கை அரண்மனைவாசலில் மட்டுமேசிலைஉள்ளது என்றும், ஆனால் திராவிடகட்சி தலைவர்களுக்குஅனைத்து இடங்களிலும் சிலை வைத்துள்ளனர். மறைந்தகலைஞர் கருணாநிதிக்கு 250கோடியில். நினைவிடம் கட்டியுள்ளதாகவும், ஆனால்வீரமங்கை வேலுநாச்சியாருக்கு நினைவு இடம்கோழிக் கூடு போல சிறிதாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும் நான்கருணாநிதியின் வாரிசும் அல்ல எம்ஜிஆரின் வாரிசு அல்ல சாதாரண குடிமகனான நான் தமிழ் உணர்வுகளை தட்டியெழுப்பி36 லட்சம் வாக்குகள் பெற்று, மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ளதாகவும், நான் தான் புரட்சியாளர் என்றவர், என்னைப்போல் கொள்கைக்காக தனிக்கட்சிஆரம்பித்து ஸ்டாலின், எடப்பாடிபழனிச்சாமி, ஜெயலலிதா போட்டியில் இருந்தால் அவர்களுக்குநான்கு ஓட்டுகள் கூட கிடைத்திருக்காது என்றார். லட்டில் மாட்டுக் கொழுப்பு தடவி இருப்பதாக புதிய பிரச்சனை கிளப்பியுள்ளனர். நான் கொழுப்பு தடவி இருந்தாலும்சாப்பிடுவேன், இல்லாவிட்டாலும் சாப்பிடுவேன், இதுவரை யாரும் உயிரிழக்கவில்லையே என்றவர், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மொட்டைஅடித்து அனுப்புகின்றனர் அது பிரச்சினையாக தெரியவில்லை, லட்டுதான்பிரச்சனையாக தெரிகிறதுஎனவே வேதனைதெரிவித்தார்.