நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

70பார்த்தது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 185 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 24 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 2, 780/- வீதம் மொத்தம் ரூ. 66, 720/- மதிப்பீட்டிலான காதொலி கருவிகளையும், 12 பயனாளிகளுக்கு தலா ரூ. 17, 000/- வீதம் மொத்தம் ரூ. 2, 04, 000/- மதிப்பீட்டிலான இயற்கை மரணத்திற்கான உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 6, 00, 000/- மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவித்தொகைக்கான ஆணைகளையும் என ஆக மொத்தம் 48 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆஷா அஜித், வழங்கினார்.

தொடர்புடைய செய்தி