சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேயுள்ள பாப்பாகுடியைச் சேர்ந்தவர் காளையார்( 55) கூலி தொழிலாளி. இவருக்கு 3 பெண், 1 ஆண்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இலுப்பக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பொழுது அவரது மகன் வாகனம் நிறுத்துப் போது இரு தரப்பினருக்கிடையே தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூவந்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாம் அந்த புகாரை சரிவர போலீஸார் விசாரிக்கவில்லையாம். இதனால் முன் விரோதம் இருந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் காளையாரை மர்ம கும்பல் இன்று கழுத்தை அறுத்து கொலை செய்தது. இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கொலை செய்யப்பட்ட காளையாரின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காளையாரை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்தால் தான் அவரது உடலை வாங்குவோம் என்று கூறி சிவகங்கை மானாமதுரை இளையான்குடி சாலையில்உள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்வின் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.