சுகாதாரமற்ற முறையில் காணப்படும் சிவகங்கை அரசு மருத்துவமனை

51பார்த்தது
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்த நிலையில் இங்கு சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு, தாய் சேய் நலப்பிரிவுகளில் ஏராளமானோர் வந்து சிகிச்சைபெற்று செல்கின்றனர்.

இங்கு தாய் சேய் நலப்பிரிவில் சுகப்பிரசவம் அதிகம் நடைபெறுவதால் இந்த பிரிவில் ஏராளமான கர்ப்பினி பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்த இரு பிரிவுகளின் பின்புறம் சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் கழிவு நீர் குழாய்களில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதுடன் கழிவு நீர் கால்வாய்களின் மூடிகள் திறந்து நிலையில் கிடக்கின்றன. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசு மருத்துவமனை நோய் தீர்க்கும் நிலையமா அல்லது நோய் பரப்பும் கூடாரமா என கேள்வி எழுந்துள்ளது. எனவே கழிவு நீர் கால்வாய்களை முறையாக பராமரித்தும் குழாய்களை சீரமைத்து சுகாதாரத்தை பேணி காக்க மருத்துவக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி