வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக ஆட்சியரகத்தில் கள ஆய்வு

69பார்த்தது
சிவகங்கை மாவட்டம், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆர். லால்வேனா, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத்துறை சார்ந்த முதல்நிலை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதில் தெரிவிக்கையில்: சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தினால் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணிகள் தொடர்பாகவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும் மேம்படுத்தும்விதமாகவும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, தொடர்ந்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், அரசின்பல்வேறு துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள், தேவையான நிதிநிலைகள் மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you