இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

54பார்த்தது
அறந்தாங்கியில் இருந்து கார்த்திகேயன் (வயது 41) என்பவர் தனது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் தனது வாகனத்தை ஓட்டிக்கொண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தெம்மாபட்டு பகுதி அருகே சிவகங்கை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது எதிர் திசையில் மானாமதுரையிலிருந்து திருமணத்திற்கு செல்வதற்காக இசக்கி வேலு (வயது 31) என்பவர் வாகனத்தை இயக்கிக் கொண்டு வரும் போது எதிர்பாராத விதமாக இரண்டு வாகனமும் எதிரெதிரே மோதிக்கொண்டது.

இதில் இரண்டு வாகனத்திலும் வந்த அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்த காரணத்தினால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாகசாலையில் செல்வோர் மற்றும் அக்கம் பக்கத்தினர்விபத்திலிருந்து அனைவரையும் மீட்டனர். எனினும் தலை மற்றும் மார்பு பகுதி என உடலில் சில இடங்களில் லேசான காயம் ஏற்பட்டதால் முதலுதவி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணமாக தற்சமயம் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதியில் மதுரை செல்வதற்கான புதிய நான்கு வழி சாலைகள் மற்றும் சாலை விரிவாக்க பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் காரணத்தினால் வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி பணி விழிப்புணர்வு பதாகைகள் ஏதும் வைக்கப்படாமல் இருந்ததே இந்த விபத்துக்கான காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி